technology

img

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பின்னுக்குத் தள்ளப்பட்ட ஆப்பிள் நிறுவனம்! முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஆப்பிளை நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி சாம்சங் நிறுவனம் முதல் இடத்திற்கு முந்தியுள்ளது.

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் எந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் அதிகம் விற்பனையானது என்பது குறித்த ஆய்வறிக்கையை இண்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி 23.4 சதவிகித மார்க்கெட் ஷேர் உடன் சாம்சங் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. அந்நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 73.6 மில்லியன் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்துள்ளது. இந்த பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் 18 சதவிகித மார்க்கெட் ஷேர் உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக சியோமி, ஓப்போ மற்றும் விவோ ஆகிய நிறுவனங்கள் முறையே 3, 4 மற்றும் 5 ஆவது இடத்தை பிடித்துள்ளன. 

;